செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே காய்ச்சலுக்கு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புழுதிவாக்கம் கிராமத்தைச் சார்ந்த பிரகாஷ், ஜோதி தம்பதியின் ஒன்றரை வயது மகன் தர்ஷன், காய்ச்சல் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் பத்மநாபன் நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குழந்தை வீட்டிற்கு அழைத்து சென்ற போது வாயில் இருந்து நுரை வெளியேறி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையும் பாருங்கள் - மருத்துவர் அலட்சியம், குழந்தை உயிரிழப்பு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Chengalpattu