திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதியின் பாதுகாப்பிற்காக சென்ற காவலர், அங்கிருந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய கைதிக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த கைதியின் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவலர் இளம்ராஜா என்பவர் சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கு பயிற்சி பெற்று வந்த நர்சிங் மாணவிக்கு காவலர் இளம்ராஜா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.