தலை பொங்கல் கொண்டாட வெளியூர் சென்றிருந்த புதுமண தம்பதி வீட்டில் கைவரிசை காட்டிய இரட்டை கொள்ளையர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. சென்னை தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் - ராதா தம்பதி, ஆவடிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, .பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸில் புகார் அளித்தனர்.