தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அருணாசலபுரம் கிராமத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான குடிநீர் தொட்டி அருகே மலம் கழித்து சென்ற மர்மநபரால், தண்ணீர் பிடிக்க முடியாமல் கிராம மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மர்மநபரைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், அருகில் அமைந்துள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.