தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மகளிர் குழுக்களிடம் வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாததால், அரளி விதைகளை சாப்பிட்டு மூன்று மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.