திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புளியமரத்தில் மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தாய் மற்றும் மகனை, பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். பூத்தாம்பட்டியை சேர்ந்த ராஜேஷ், தனது தாயுடன் மினிவேனில் ஊர் ஊராக சென்று வெங்காயம் விற்பனை செய்து விட்டு வீடு திரும்பியபோது, விபத்தில் சிக்கினர்.