சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு ஜல்லி ஏற்றி வந்த மினி லாரி வளைவில் நிலை தடுமாறி சுமார் 150 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. மினி லாரி ஓட்டுநர் ஈஸ்வரன் தலையில் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மினி லாரி அதிகமான பாரத்தை ஏற்றி வந்ததால் வளைவில் திரும்ப முடியாமல் பள்ளத்தில் பாய்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.