திருப்பூர் அருகே தாறுமாறாக ஓடிய மினி பஸ், சரக்கு ஆட்டோ மற்றும் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கணபதிபாளையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற மினி பஸ், பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் சுவர் மீது மோதி நின்றது. இதில், சரக்கு ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஓட்டுநர் ஜெயச்சந்திரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.