திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பைக்கை திருடியதாக கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அயினாபட்டி காலனி தெருவை சேர்ந்த சுரேஷ், சமீபத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், இதனால் ஆத்திரமடைந்த பைக்கின் உரிமையாளர் அறிவழகன், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.