சென்னை ஓஎம்ஆர் சாலை ஒக்கியம் அருகே தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த தனியார் வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.