கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கவனிக்காமல் கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அஞ்சூர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்த மோகன் குமார் பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. மோகன் குமார் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.