கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மதுபோதையில் காரை திருடிச் சென்று பைக் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நபரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். வயலூரை சேர்ந்த முகமது அன்சர் அலி என்பவர் தனது காரை பேருந்து நிலைத்தில் நிறுத்திவிட்டு சென்ற நிலையில் மணிகண்டன் என்பவர் மதுபோதையில் காரை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.