போக்சோ புகார் (Pocso) : ஈரோட்டில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பெருந்துறை சிப்காட் பகுதியில் லோடுமேனாக பணிபுரிந்த ஜெய்சங்கர் என்பவர், அதே பகுதியை சேர்ந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகள் உதவி மையத்திற்கு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நபரிடம் விசாரணை மேற்கொண்டு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.