ராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்து, வீட்டுக்கு வெளியில் புதைத்த கணவரை போலீசார் கைது செய்தனர். ஏரகாடு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜ் என்பவருக்கும், அவரது மனைவி தனலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. அப்போது வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து மனைவியை தலையில் தாக்கி கொன்ற தர்மராஜ், வீட்டிற்கு வெளியில் இருந்த மணல் பகுதியில் உடலை புதைத்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், தர்மராஜை கைது செய்த நிலையில் புதைக்கபட்ட அவரது மனைவியின் உடலையும் கைப்பற்றி, அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.