ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தொல்லை கொடுத்து வந்த 44 வயது சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். தென்மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார், பள்ளி மாணவியை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.