திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் குப்புசாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் போலீசார் உடலை மீட்டு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.