வெளிநாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்டு பிடிபட்ட தங்க நகையை குறைந்த விலைக்கு தருவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்த நபரை கைது செய்ய கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குருக்கல் மடத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜூ என்பவரிடம், தக்கலை சேர்ந்த பிராங்ளின் என்பவர் நட்பாக பழகியுள்ளார். இந்த நிலையில், சுங்க துறையில் தனக்கு தெரிந்த அதிகாரி ஒருவர் இருப்பதாக கூறி குறைந்த விலையில் நகை வாங்கி கொடுப்பதாக பிராங்ளின் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனைநம்பி, ராஜூ கொடுத்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும், பைக் ஒன்றையும் வாங்கி கொண்டு பிராங்ளின் தலைமறைவானதாக கூறப்படுகிறது.