கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் நூதன முறையில் ஏமாற்றி யாசகம் பெற்ற நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பகவதி அம்மன் கோவில் ஆராட்டு வாயில் பகுதியில், ஒரு நபர் சுற்றுலா பயணிகளிடம் யாசகம் பெற்று கொண்டிருந்தார்.இரண்டு கைகள் இழந்த நிலையில், கண்பார்வையும் இல்லாதவர் போல் இருந்தவர், தன் சட்டைக்குள் மறைத்து வைத்து இருந்த கைகளை எடுத்து யாசகம் போட்ட பணத்தை சட்டை பையில் வைத்து விட்டு, பின்னர் மீண்டும் மாற்று திறனாளி போல் யாசகம் கேட்டு நடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.