சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த திரிபுராவை சேர்ந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், 11 ஆயிரம் பணம், 17 கிராம் தங்க நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பெருங்குடி, தரமணி, துரைப்பாக்கம், நீலாங்கரை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தரமணி உதவி ஆணையர் சையதுபாபு தலைமையிலான போலீசார், பெருங்குடியில் கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த திரிபுராவை சேர்ந்த ஜூடிஸ் தாஸ் என்பவரை கைது செய்தனர். சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஜமால் என்பவர் ரயில் மூலம் கொண்டு வந்து தரும் கஞ்சாவை 50 கிராம் 500 ரூபாய் வீதம் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.