கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் பிக்கப் வாகனங்களை குறி வைத்து திருடி வந்த நபரை கைது செய்த போலீசார் 4 பிக்கப் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். குந்தாரப்பள்ளியில் கடந்த 2ஆம் தேதி பிக்கப் வாகனம் திருடிய திருவண்ணாமலையை சேர்ந்த மணிவண்ணனை போலீசார் கோவையில் கைது செய்த நிலையில், அவர் இதே பாணியில் தொடர்ந்து பிக்கப் வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது.