தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த 55 வயது பெண் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன் என்ற இளைஞர் திடீரென உள்ளே புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் பெரிய கருப்பனை சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.