நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே, முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப்பகுதியில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இறந்த யானையின் இடதுபக்க முன்னங்காலின் கீழ்ப்பகுதி, இதயம் மற்றும் வாய்ப்பகுதியில் காயம் காணப்படுவதால், யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, இந்த ஆண் யானை இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.