திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அபிமன்யு என்பவரது மனைவி நாகஜோதிகாவிற்கு பிறந்த ஆண்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில், தாய்ப்பால் கொடுத்து படுக்க வைத்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை மீது புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : 151 ஆடுகளை பலியிட்டு முனியப்பன் சாமிக்கு நேர்த்திக்கடன் உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கிய லாரி ஓட்டுநர்