கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மின் கம்பத்திலிருந்து தீப்பொறி பறந்து வந்து விழுந்ததில் மரக்கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நாகர்கோவில் கணபதி நகர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் என்பவர் வைத்தியநாதபுரத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மரக்கடைக்கு அருகே உள்ள மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பொறி காற்றில் பறந்து வந்து விழுந்துள்ளது. தொடர்ந்து மரக்கடையில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் கடையில் இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.