நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீழ்வேளூர் சுற்றுவட்டாரங்களான தேவூர், காக்கழனி, செருநல்லூர், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவு பணிகளை மழையில் நனைந்தபடியே பெண்கள் மேற்கொண்டனர்.