கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்திய காதல் கணவரை கையும் களவுமாக பிடித்து, வீட்டிற்குள் வைத்து பூட்டி ரகளையில் ஈடுபட்ட மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது. வ.உ.சி நகரை சேர்ந்த லோகராஜ், அதே பகுதியை சேர்ந்த கலைச்செவ்வியை காதலித்து திருமணம் செய்துள்ள நிலையில், வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கலைச்செல்வி புகார் அளித்துள்ளார்.