சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பி.சாண்ட் மணல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, மணலுக்குள் புதைந்த 4 பெண்களை அப்பகுதியில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர். கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆனஸ்ராஜ் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய போது, அந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, கொண்டையம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த 4 பெண்கள், பி.சாண்ட் மணலுக்குள் புதைந்தனர். இதனை கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கைகளாலும், ஜேசிபி இயந்திரம் மூலமும் மணலை அப்புறப்படுத்தி பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.