தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரும்புத்தலை பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் லாரியில் காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்புறம் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தப்பி ஓடிய முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் லிவிங்ஸ்டனை போலீசார் தேடி வருகின்றனர்.