ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் மதுவிலக்கு சோதனை சாவடி பகுதியில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்த வீடியோ வெளியாகியுள்ளது. சிறுத்தை நடந்து சென்றதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.