கோத்தகிரி நகர் பகுதியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு நேபாளம் நாட்டை சேர்ந்த ஜனக் என்ற காவலாளி இரவு நேர காவலாளியாக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு பள்ளி வளாகத்திலேயே குடியிருப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில்,இவரது மூத்த மகன் பகதூர்(25) பெங்களூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரக்கூடிய நிலையில்,ஒருவார விடுமுறைக்கு கோத்தகிரியில் உள்ள தனது அப்பாவின் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.அப்போது நெட்வொர்க் சிக்னல் சரியாக கிடைக்காததால் இரவு சுமார் 11.30 மணியளவில் பகதூர் வீட்டில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது.அப்போது பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது.அந்த சமயத்தில் பகதூர் கூச்சலிட்டு நாயை வேட்டையாட வந்த சிறுத்தையை விரட்ட முயன்ற போது சிறுத்தை பகதூரை தாக்கி உள்ளது.கை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில் உடனே அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. Related Link மார்ச் 1 முதல் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கடன் இல்லை Newstamil,Newstamil24x7live, Newstamildigital24x7, நியூஸ்தமிழ்24x7, நியூஸ்தமிழ், Newstamil24x7channel, Livetamilnews24x7, Tamilnews