நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள காவலர் குடியிருப்பில் சிறுத்தை உலா வந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில், குடியிருப்புகள் நுழைந்து சிறுத்தை அங்கு நடமாடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.