ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் உலா வரும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவு திம்பம் வனப்பகுதியில் மழை பெய்தபோது, சிறுத்தை ஒன்று சாலையில், சர்வ சாதரணமாக அமர்ந்து சாலையில் வழிந்தோடிய மழை நீரை குடித்துக் கொண்டிருந்தது. இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இதையும் பாருங்கள் - "சில்வண்டு சிக்கும் ஆனா நான் சிக்க மாட்டேன்" போக்கு காட்டும் சிறுத்தை | Leopard | KovaiNews