ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தையை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் அங்கு படுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுத்தையை வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர், திம்பம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக நடமாடுகின்றன. இதையும் பாருங்கள் - ஹாயாக விளையாடிய சிறுத்தை, பீதியில் வாகன ஓட்டிகள் | Erode | Cheetah | Forest