நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள பாறை மீது சிறுத்தை ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த காட்சி வெளியாகியுள்ளது. இதை பார்த்து அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் அசம்பாவிதம் நடைபெறும் முன் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.