நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் உறங்கி கொண்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. பேரகணியிலிருந்து கன்னேரி செல்லும் சாலையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு உறங்கி கொண்டிருந்த வளர்ப்பு நாயை கவ்வி கொண்டு ஓடியது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில், வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.