தென்காசி மாவட்டம் கடையம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை நாயை கவ்வி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.கடந்த சில நாட்களாக கடையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அந்தோணிராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை புகுந்து வளர்ப்பு நாயை கவ்வி சென்றது.சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளதோடு, வனவிலங்குகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.