கோவை மாவட்டம், சூலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை உலவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நள்ளிரவு ஒரு மணியளவில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் புகுந்த சிறுத்தை, அப்பகுதியில் உலா வந்ததை பார்த்த ஆலை நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியதோடு, சிறுத்தை எங்காவது பதுங்கி இருக்கிறதா எனவும், வனத்துறையினர் தேடி வருகின்றனர்.இதையும் பாருங்கள் - தொழிற்சாலைக்குள் எகிறி குதித்த சிறுத்தை, கோவையில் பதற்றம் | Leopard Roaming