திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்யும் நிலையில், செம்மண்மேடு பகுதியில் பெரிய பைன் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், மின் கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்சர்வேட்டரி, செல்லபுரம், புதுக்காடு, செம்மண்மேடு உள்ளிட்ட பகுதிகளிலும், பூம்பாறையில் இருந்து மன்னவனூர் செல்லும் வழியில் பல்வேறு கிராமங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.