தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கோயில் கொடைவிழாவை ஒட்டி நடைபெற்ற 1,008 விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடைவிழாவை ஒட்டி, அம்மனுக்கு சந்தனக்காப்பு தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஆயிரத்து எட்டு பெண்கள் கலந்துகொண்டு, பூஜை பாடல்களை பாடி திருவிளக்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.