புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் நடைபெற்ற குளவெட்டு எனப்படும் நூதன திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், குளத்து மண்ணை மடியில் ஏந்தி கரையில் நிரப்பி அம்மனை வழிபட்டனர். இதில், இஸ்லாமிய பெண்கள் பலரும் பங்கேற்று வழிபாடு நடத்தியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.