தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சுண்ணாம்புக்கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சியாமளாதேவி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி சுமந்தும், ஆண்கள் அலகு குத்தி, காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.