சென்னை திருவெற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் ஆலயத்தில் நவராத்திரி 8 ஆம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வடிவுடையம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.