திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு கூத்தாண்டவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை ஒட்டி, தேர்த்திருவிழா நடைபெற்றது. மாடப்பள்ளி கிராமத்தில் இருந்து கலலூர் கிராமம் வரை தேர் பவனி சென்றது. அதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.