செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7 ஆம் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் தலசயன பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர்.மாட வீதிகளில் வலம் வந்த பெருமாளை வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.