புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இரவு கடற்கரையில் தங்கிய பக்தர்கள் விடியற்காலை கடலில் குளித்துவிட்டு சுப்பிரமணிய சாமி கோயிலில் தரிசனம் செய்கின்றனர். இதனிடையே நேற்று இரவு 50 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது.