தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் சுமார் 4மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்தனர். அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது.