சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் உள்ள திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில், திருவிழாவையொட்டி தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.