திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பாதையில், மேலிருந்து கீழே இறங்கும்போது, 3-வது வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் சாலையில் பாறை உருண்டு விழுந்தது. அந்த சமயத்தில் வாகனங்கள் ஏதும் சாலையில் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், சாலையில் விழுந்த பாறையை பொதுமக்களே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.