கோவை மாவட்டம் நரசிபுரம் கிராமத்தில் வீட்டின் முன்பு மரத்தடியில் படுத்துறங்கிய கூலித் தொழிலாளியை, ஒற்றைக் யானை விரட்டி சென்று மிதித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியால் கிராமப் பகுதிகளில் முகாமிட்ட காட்டு யானைகள், வறட்சி மாறிய பின்பும் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் அடிக்கடி உணவு தேடி கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் நரசிபுரம் கிராமத்தில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானையை, வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் முன்பு மரத்தடியில் படுத்துறங்கி கொண்டிருந்த சந்திரன் என்பவர், சத்தம் கேட்டு ஓடிய அவரை விரட்டிச் சென்ற யானை காலால் மிதித்தும், தந்தத்தால் முதுகில் குத்தியும் கொன்றது.