தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புலிமால் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீராம், ஆட்டோவை இயக்கி சென்ற போது அதிவேகமாக வந்த மினி லோடு ஆட்டோவை வழிமறித்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, மினி லோடு ஆட்டோவில் வந்தவர்கள் ஸ்ரீராமை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.